ரங்காராவ்
அன்றைய ரங்காராவுக்கு இணையாக இப்போதுள்ள குணச்சித்திர நடிகர்கள் எவரையாவது சொல்ல முடியுமா?இத்தனைக்கும் அவர் தமிழ் நடிகர் அல்ல,தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் .தமிழில் தான் எத்தனை அருமையான படங்களில் நடித்து விட்டார்?!
எங்க வீட்டுப் பிள்ளையில் சரோஜா தேவிக்கு அப்பா.
கற்பகம் படத்தில் கே.ஆர் விஜயாவுக்கு அப்பா ,
பால நாகம்மா தெலுங்கில் மந்திரவாதியாக வில்ல நடிப்பு வேறு...!
வீர அபிமன்யூவில் கடோத்கஜன் ...;
"கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
இது கௌரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்...ஹா ...ஹக்க...ஹக்க...ஹக்கா"
மறக்க முடியுமா இந்தப் பாடலை ?
ரஜினி ...கமல் தலைமுறையில் கூட ரங்காராவ் சகாப்தம் இல்லை .அவர் எம்.ஜி.யார் ,சிவாஜியோடு முடித்துக் கொண்டவர் .
அப்படியும் கூட இன்றும் "கல்யாண சமையல் சாதம் ..." பாடல் பிரபலம் தான் என்று நினைக்கிறேன் .
பாசமான ..பணக்கார அப்பா கேரக்டருக்கு சாலப் பொருந்திய ஒரே நடிகர் அவர் மட்டும் தான் . அதற்குப் பிறகும் கூட நாம் எத்தனையோ சினிமா அப்பாக்களைப் பார்த்து விட்டோம் தான் .இந்த அளவுக்கு யாரும் மனதில் நின்றதாகத் தெரியவில்லை.அவரது இந்த வெற்றிக்குக் காரணம் எப்போதும் மிதமான நகைச் சுவை இழையோடும் பேச்சும் ...அப்பாவித்தனம் கலந்த கம்பீர முக பாவமுமாகத் தான் இருக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக அவரைப் பற்றி நாலு வரி எழுதியே ஆகா வேண்டும் என்ற எனது ஆசை இன்று எதோ சுமாரான அளவில் பூர்த்தி ஆனது.
இந்தப் பதிவை வாசிப்பவர்கள் ரங்கா ராவ் ரசிகர்களாக இருந்தால் மறக்காமல் உங்களது ரசனையை பின்னூட்டம் இடுங்கள் .
9 comments:
மிகவும் அற்புதமான மனிதரும் கூட..
பின்னூட்டம் ஆஜர்!!! அவர் நடிச்ச ஒரு படத்தில் நாலு கால் மண்டபத்திலனு ஒரு பாட்டு வரும். அண்ணன் தம்பிங்க சேர்ந்து பாடற மாதிரி, எந்தப்படம் தெரியுமா?
எம்.ஜி.ஆரை மாப்புள மாப்புள என்று விளித்துக்கொண்டு :) எங்க வீட்டுப்பிள்ளையில் சூப்பரா நடிச்சுருப்பார் இல்ல ?
அவர் பெயரை சொன்னவுடன் தத்தி தத்தி பேசும் அவர் முகம் நியாபகம் வந்திட்டது !!!!
நல்ல குணச்சித்திர நடிகரை நினைவு கூர்ந்ததற்க்கு மிக்க நன்றி பரணி,அவருடைய அந்த மிடுக்கான நடையும்,கம்பீர குரலும் வேறு எந்த நடிகருக்கும் வராது,
கபீஷ்,ரங்காராவ் பாடும் முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்,என்ற பாடல் அன்புச்சகோதரர்கள் என்ற படத்தில் இடம் பெற்றது.
//அவர் நடிச்ச ஒரு படத்தில் நாலு கால் மண்டபத்திலனு ஒரு பாட்டு வரும். அண்ணன் தம்பிங்க சேர்ந்து பாடற மாதிரி, எந்தப்படம் தெரியுமா? //
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2987
SOTD #635: muthukku muththaaga from anbu sagOtharargaL
ரொம்ப நன்றிங்க மகுடம் மோஹன் & பாலராஜன் கீதா எந்த பாட்டு , படம்னு சொன்னதுக்கும் சுட்டி கொடுத்ததுக்கும்
வணக்கம்
மிக அற்புதமான நடிகர்
\\பாசமான ..பணக்கார அப்பா கேரக்டருக்கு சாலப் பொருந்திய ஒரே நடிகர் அவர் மட்டும் தான்\\
கம்பீரமாண, சுயகவுரமுள்ள பாத்திரத்திற்கும் அவர் மிக பொருத்தமானவர்
எம்.ஜி.யார் கல்கி-ன் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்பியபோது இவரைத்தான் பெரிய பலுவேட்டையார் கதாபாத்திறத்திற்கு அனுகியதாக அறிந்தேன்
என்னாலும் வேறுயாரையும் அந்த கதாபாத்திறத்திற்கு பொருத்தி பார்க்கமுடியவில்லை
நன்றி
இராஜராஜன்
உண்மையில் மறக்க முடியாத ஒரு தலை சிறந்த குணச்சித்திர நடிகர் அவர்.
ரஜனி, அர்ஜுன், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்களிடமும் இவரது பாதிப்பு இருக்கும். மற்றும் ஒரு சிறந்த நடிகர் எஸ் வி சுப்பையாவை மறந்து விட்டீர்களே?
ரங்காராவ், எஸ் வி சுப்பையா, இந்த வரிசையில் வேறு ஒரு நல்ல நடிகரும் கூட இருக்கிறார், சகஸ்ரநாமம் (போலீஸ்காரன் மகள்) படம் பார்த்தீர்களா? காணாமல் போன நடிகர்கள் வரிசையில் வேறு ஒருவரும் இருக்கிறார். 'காதல் ஓவியம்' படத்தின் நாயகன் ' கண்ணன்
Post a Comment