Thursday, April 16, 2009

ரஜினியும் ஹேர் ஸ்டைல்களும்

ரஜினி படம் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் விவரம் தெரிந்த பின் ரஜினியின் முடி அலங்காரத்தை கவனிக்க மறந்ததில்லை நான், விவேக் கூட ஒரு மேடைப் பேச்சின் பொது சொல்வார் எதிர்க்காற்றில் சைக்கிளில் வந்தால் போதும் ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் கிடைத்து விடும் என்று ..அதிலும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது,

ஆரம்ப காலப் படங்களில் சிலவற்றில் ரஜினி முடி அலங்காரத்தை தனது கேரக்டருக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றவும் செய்தார் .

முரட்டுக் காளை படத்தில் கொஞ்சம் வித்யாசமான முடி அமைப்பு தான்

எங்கேயோ கேட்ட குரல் என்றொரு படம் ...கமலின் "சகல கலா வல்லவன் " உடன் வெளியான படம் ,அம்பிகா,ராத என இரண்டு கதாநாயகிகள் ரஜினிக்கு அந்தப் படத்தில் ரஜினிக்கும் முடி அலங்காரம் வழக்கமான படி களைந்து பறக்காமல் ஒரு கிராமத்து அமைதியான குடும்பத் தலைவனை சித்தரிக்கும் வகையில் .

கமலும் சகல கலா வல்லவனில் குடுமி வைத்துக் கொண்டு நடித்தார் ,

மூன்று முகம் படத்தில் இன்னும் கொஞ்சம் வித்யாசம் காட்டினார் ஹேர் ஸ்டைலில் .மகன் ரஜினிக்கு ஒரு ஸ்டைல்..அப்பா ரஜினிக்கு ஒரு ஸ்டைல். பிக் பாக்கெட்டாக வரும் தம்பிக்கும் ஒரு ஸ்டைல் .

நெற்றிக் கண் படத்திலும் அப்படியே மாற்றம் கொஞ்சம் இருந்தது .
பாபாவிலும் மாறுதல் காட்டினார் தான் .

ஆனால் எல்லாப் படங்களோடு ஒப்பிட்டாலும் கூட சிவாஜியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனைகளோடு வேறு எந்தப் படத்தையும் ஒப்பிட முடியவில்லை.அத்தனை காட்சிகளிலும் ரஜினியின் இளமை மீட்டு எடுக்கப் பட்டதைப் போல அருமையான ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனைகள்.

"சகானா சாரல் ....பாடலிலும்

"வாஜி...வாஜி...சிவாஜி....பாடலிலும் ரஜினிக்கு நிகர் ரஜினியே தான் .

சிகை அலங்காரம் என்பது இப்படி பொருந்தி அமைந்து விடுதல் நடிகர்களில் ரஜினிக்கு அதிர்ஷ்டமே ...சத்யராஜ் ஆரம்பம் முதலே விக் வைத்து நடித்தாலும் அது பொய் முடியாகத் தோன்றியதில்லை. அப்படித் தான் ரஜினிக்கும் எத்தகைய சிகை அலங்காரமும் அலட்டலாக தெரிவதில்லை .

சிலருக்கு தங்களது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் இழந்த பின் விக் பொருத்தமாக இருப்பதே இல்லை ..உதாரணம் விஜய் காந்த் ...கார்த்திக் ...பிரபு .

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படம் போடுங்க தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க அவுகதான...

நட்புடன் ஜமால் said...

எங்கேயோ கேட்ட குரல்\\

ரஜினி படங்களில்

சிறந்தவைகளில் இதுவும் ஒன்று.