Tuesday, December 2, 2008

நானே நானா ...யாரோ தானா?!

நான்

நானாகி வாழ

ஆசைப்பட்ட போது

எனக்கு நானே

யாரோவாகிப் போயிருந்தேன் ;

என் பெயரின்

முன்னும்

பின்னும்

யாரோ குடியிருந்தார்கள் ;

குடியிருக்கிறார்கள் ;

முன்பு

அப்பா ;

பின்பு

கணவர்;

ஆம் ...

உங்களுக்கும் தெரிந்தே இருக்கலாம் ...!

நிர்மலா பெரியசாமி

கமலா செல்வராஜ்

அனிதா ரத்னம் ...

இப்படித்தான் நானும் ....

மலர்விழி மதுசூதனன் ஆனேன்?!

இதனால்

ஒன்றும்

இன்றெனக்கு

பெருத்த சந்தோசமேதுமில்லை

சிறுத்த துக்கமுமில்லை

சின்னதாய்

ஒரு சந்தேகம் மட்டுமே!!!

பின்புறம் நீள்வது

வால் என்றால்

முன்புறம் ஒட்டிக்கொண்டது

தும்பிக்கையா?

தேவையா இந்த ஆராய்ச்சி ?

என்று சிலர் நினைக்கிறீர்கள் தானே ...!

அவர்களுக்குச் சொல்லத் தோன்றியது இதை ;

சரி விடுங்கள்

நான் ஒன்றும்

வாலில்லாக் குரங்கும் அல்ல!

தும்பிக்கையில்லா யானையும் அல்ல !

நான் என்றும் நானே!

என் வீட்டில்

என்னுலகில்

எல்லாம் நானே ;

நாணில்லாத நான் ...

நானே!!!

நானே நானா யாரோ தானா?!

3 comments:

தமிழ் said...

/நான் ஒன்றும்

வாலில்லாக் குரங்கும் அல்ல!

தும்பிக்கையில்லா யானையும் அல்ல ! /

அருமை

நட்புடன் ஜமால் said...

\\பெருத்த சந்தோசமேதுமில்லை

சிறுத்த துக்கமுமில்லை \\

இது அழகான வார்த்தை பிரயோகம்.

நட்புடன் ஜமால் said...

\\நானே நானா யாரோ தானா?!\\

நல்ல பாடல் வரிகள்.

அடிக்கடி முனுப்பேன்.

காரணம் - அதுவே

நானே நானா யாரோ தானா?!