Wednesday, October 29, 2008

குஷ்பூவுடன் ஒரு நேர்காணல்


என் துபாய் நண்பர் ஒருத்தரோட பாஸ் அவர்கிட்ட ஒரு கேட்கக் கூடாத கேள்வியக் கேட்டுட்டார் .

வாட் இஸ் திராவிடியன் கல்ச்சர் ? கேன் யு எக்ஸ்ப்ளைன் மீ ?அவருக்கு பதில் சொல்லத் தெரியலை சும்மா லெமூரியாக் கண்டம் ...தமிழ் சங்கம் ...கடல் கோளினால் பழைய குமரிக்கண்டம் அழிஞ்சு போச்சு,அப்படி இப்படின்னு மழுப்பிட்டு வந்துட்டாராம் .அவர் எஸ்கேப் ஆயிட்டு போகட்டும் .உண்மைல விவரம் தெரிஞ்சவங்க எக்ஸ்ப்ளைன் பண்ணுங்கப்பா ,

திராவிடக் கலாச்சாரம்னா என்ன ? குஷ்பூ கற்பு பத்தி பேட்டி கொடுத்த உடனே விளக்குமாத்தை தூக்கிட்டுப் போய் அந்தம்மாவை கோர்ட்ல வரவேற்ப்பு பண்ணினாங்களே அது தான் திராவிடியன் கல்ச்சரா? இல்ல இப்போ ஏதோ

"குமுதம் ரிபோர்டர்ல படிச்சேன் ... "டேட்டியோ" டேட்டிங் + வீடியோ =டேட்டியோ கல்ச்சர்னு

ஒன்னு பரவிட்டு இருக்காமே ஐ.டி இளைஞர்கள்கிட்ட அதுக்கும் திராவிடியன் கல்ச்சருக்கும் எதாவது ரத்த சம்பந்தம் இருக்குமோ ?இப்படி எல்லாம் பயங்கரக் குழப்பமாயிடுச்சு ,

விவரம் அறிந்தவர்கள் எனது இந்தக் கேள்விக்கு தங்களுக்குத் தெரிந்தவரையில் பதில் கூற முயற்சி செய்யுங்கள் .

ப்ளாக் எழுத ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது ,இன்னும் ஒரு கமென்ட் கூட இல்லை என் பக்கங்களில் ...நாங்களும் இருக்கோமில்ல ...அது உங்களுக்கும் (மற்ற பதிவர் நண்பர்களுக்கு ) தெரியனுமில்ல ...அதான் நண்பர் புதுகை .அப்துல்லா பாணியில ஒரு டைட்டில் வச்சி பார்த்த என்னனு இறங்கினதுல கிடைச்ச நெட் ரிசல்ட் தான் மேல நீங்க படிச்சது ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டேன் எனக்கு முன்னாடி வந்து இங்க பழம் தின்னு கொட்டைபோட்ட மூத்த பதிவர்களுக்கு வணக்கம் ...வந்தனம் ;

முக்கிய அறிவிப்பு :-இந்தப் பதிவை யாரேனும் படித்து பிறகு பின்னூட்டமும் இட்டால் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் ...

வழங்குவோர் ---மூத்த பதிவர்கள் சங்கம்


4 comments:

Bleachingpowder said...

//:-இந்தப் பதிவை யாரேனும் படித்து பிறகு பின்னூட்டமும் இட்டால் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் //

இத தலைப்பா போட்டிருந்தீங்கனா, இந்நேரம் பின்னூட்டதில செஞ்சுரி போட்டிருக்கலாமே :))

Bleachingpowder said...

சரி பேச்சு பேச்சா இருக்கனும். அந்த ஒரு கிராம் தங்க நாணயத்தை எப்போ அனுப்ப போறீங்க

பரணி said...

வாங்க ப்ளீச்சிங்பவுடர்
தங்கம் தான் கண்ணுல படுத்து போல ,நான் கேட்ட கேள்விக்கு பதிலை காணோமே

//சரி பேச்சு பேச்சா இருக்கனும். அந்த ஒரு கிராம் தங்க நாணயத்தை எப்போ அனுப்ப போறீங்க//
முக்கிய அறிவிப்பு :-இந்தப் பதிவை யாரேனும் படித்து பிறகு பின்னூட்டமும் இட்டால் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் ...

வழங்குவோர் ---மூத்த பதிவர்கள் சங்கம்
அப்படி ஒரு சங்கம் இருக்கானு தெரியலை,இருந்தால் அவங்ககிட்ட தான் நீங்க தங்க நாணயம் பத்தி கேட்கணும் ...மற்றபடி உங்கள் வருகைக்கு நன்றி

Bleachingpowder said...

//மூத்த பதிவர்கள் சங்கம்
அப்படி ஒரு சங்கம் இருக்கானு தெரியலை,இருந்தால் அவங்ககிட்ட தான் நீங்க தங்க நாணயம் பத்தி கேட்கணும்//

இது போங்கு ஆட்டம்...நான் ஒத்துக்க மாட்டேன் :((((

ஒரு க்ராம் தங்கம் மட்டும் தரலீனா அப்புறம் தமிழ்மண கலாச்சரத்தின் படி உங்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுவேன் ஜாக்கிரதை.