Saturday, November 1, 2008

அன்றும் இன்றும் மறந்து போன விளையாட்டுக்கள்












ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் பரவலாக எல்லோராலும் விரும்பப் பட்டு இன்று அரிதாகி விட்ட சில விளையாட்டுக்கள் :-
கிட்டிப்புள்
கோலி
தாயம்
தட்டாங்கல்( இதை சொட்டாங்கல் என்றும் சொல்வார்கள் )
பாண்டி (இதை நொண்டி என்றும் கிராமப் புறங்களில் சொல்வார்கள்)
பச்சைக்குதிரை
ஆடுபுலி ஆட்டம்
கொலை கொலையாம் முந்திரிக்காய் (குலை குலையாம் என்பது தான் கொலை என்று திரிந்து விட்டிருக்கும்)
உதவி
கரண்டு (இதை
இன்று நகரத்தில் லாக் அண்ட் கீ என்கிறார்கள்)
இப்படிப் பல விளையாட்டுக்கள் நாங்கள் சின்ன வயதில் விளையாடியவை இன்று எங்கள் குழந்தைகளுக்கு அடையாளமே தெரியாமல் போய் விட்டன. இப்போதெல்லாம் வீடியோ கேம் ஆடுவதை விடவும் சிறுவர்கள் போகோ சேனல் ...ஜெடிக்ஸ் ...சுட்டி டிவி பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர் ,பார்க்கிலும் அப்படி ஒன்றும் ஓடி ஆடி விளையாடும் சிறுவர் சிறுமிகளைப் பார்க்க முடியவில்லை .சிலைடில்(சறுக்கு மரம் என்போமே அது தான் ) சறுக்குவது ஊஞ்சலில் குறுக்கும் மறுக்குமாக ஆடுவது (அந்தக் கால டயர் ஊஞ்சலுக்கு இவை எந்த விதத்திலும் ஈடில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது ..பிறருக்கு எப்படியோ !!!)மிஞ்சிப் போனால் சி சா (நம்ம ஊர் ஏற்றம் இறக்கம் தான் )இதில் ஒரு சுவாரஷ்யம் எங்கள் ஊரிலெல்லாம் மட்டு வண்டிகளில் மாடுகள் இளைப்பாற அவிழ்த்து விடப்பட்டால் போதும் உடனே ரெண்டு ரெண்டு பேராக ஓடிப்போய் ஆளுக்கு ஒரு பக்கம் நுகத்தடிக் கட்டையில் அமர்ந்து கொண்டு ;ஏலேலோ ஐலேசா ...ஏலேலோ ஐலேசா பாடிக் கொண்டே ஏற்றம் இறக்கம் ஆடுவோம் .அது ஒரு ஜாலி கேம் ,இப்போது இங்கிலீஷ் ரைம்ஸ் பாடிக் கொண்டே ஆடுகிறார்கள் (ஏதோ பரவாயில்லை ) அந்தக் காலம் போல இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடத்தான் முடியவில்லை .ஏதோ ஒப்புக்கு விளையாடுவதைப் போல இருக்கிறது இன்றைய விளையாட்டுக்கள் .




























2 comments:

Sanjai Gandhi said...

http://sanjaigandhi.blogspot.com/2008/09/blog-post.html

இதை பாருங்க நண்பரே.. இன்னும் ஏராளமாக எழுதவே இந்த வலைப்பூ வைத்திருக்கிறேன்.:)

பரணி said...

நன்றி சஞ்சய்
//இதை பாருங்க நண்பரே.. இன்னும் ஏராளமாக எழுதவே இந்த வலைப்பூ வைத்திருக்கிறேன்.:)//

பார்த்தாச்சு நண்பரே
நன்றாக இருக்கிறது உங்கள்"கிராமத்து நினைவுகள் "
எங்கள் ஊரில் அதை ஐஸ் விளையாட்டு என்று சொல்வோம் மற்றபடி அதே ஆட்டமுறைகள் தான் ஐஸ் ஒன் ..ஐஸ் டூ ... ,கலர் கோழிக் குஞ்சு பார்த்ததோடு சரி வளர்க்கும் ஆர்வம் ஏனோ எப்போதும் இருந்ததில்லை.தொடரட்டும் உங்கள் முயற்ச்சிகள் .