Sunday, November 2, 2008

பாட்டியில்லாத முதல் நாள் ...


தொடரும் வேலைகள்


மூச்சுத் திணற வைக்கும்


தினசரி வாழ்க்கை


விரைந்து ஓடி மறையும்


நாட்களும் ...மாதங்களும்


நாளெல்லாம்


பறந்து...பறந்து களைத்துப் பின் கலைந்த பொழுதில்


அப்படியும் ருசித்திடுமே


அதிகாலைக் காபியும்


அமைதியான கிராமத்து வீடும்


எல்லாம் பாட்டி சொன்ன கதையாகி


இனி எப்போது ருசிப்போமோ ?


தயங்கித் தயங்கி யோசிக்க வைத்த


பாட்டியில்லாத

இந்த நாள்...!!!

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

பாட்டிசொல்லை தட்டாத பாண்டியராஜனா நீங்கள்.. பதிவில் வரிகள் இடைவெளி அதிகமாக உள்ளது முடிந்தால் சரிசெய்து பாருங்கள்...

பரணி said...

வாங்க ஞானசேகரன்
//பாட்டிசொல்லை தட்டாத பாண்டியராஜனா நீங்கள்...//

நான் பாண்டியராஜன் இல்லை திருமதி.பரணி,

//பதிவில் வரிகள் இடைவெளி அதிகமாக உள்ளது முடிந்தால் சரிசெய்து பாருங்கள்...//

இடைவெளி வராமல் எழுதத் தெரியவில்லை,கூகுளில் டைப் செய்து இங்கே பேஸ்ட் செய்தால் இப்படி வரிகளுக்கு இடையில் தேவைக்கு அதிகமாய் இடைவெளி வந்து விடுகிறது எப்படித் தவிர்ப்பதென்று தெரியவில்லை,தெரிந்தால் சொல்லுங்கள்

seik mohamed said...

use http://www.tamil.sg/

seik mohamed said...

use http://www.tamil.sg/

வல்லிசிம்ஹன் said...

வேர்ட் பாடில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்யலாமே.
நல்லா இருந்தது பாட்டியின் நினைவுப் பாட்டு.